ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா இன்று முதல் கடற்சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
 | 

ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டம் நான்காவது கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா இன்று கடற்சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

மும்பை மசகான் கட்டுமான தளத்தில் இந்த நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டத்தை ராணுவ தளவாட உற்பத்தி துறை செயலாளர்  தொடங்கி வைப்பார் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நீரடி பிரிவின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு புதிய ஆறு ஸ்கார்பின் வகை நீர்மூழ்கிகளை பிரான்சின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2017ல் முதல் நீர்மூழ்கி கல்வாரி படையில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு காந்தேரி மற்றும் கரன்ஞ் ஆகிய நீர்மூழ்கிகள் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காவது நீர்மூழ்கியும் கடற்சோதனைக்கு தயாராகி விட்டது.

நான்காவது நீர்மூழ்கிக்கு வேலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மும்பை மசகான் தளத்தில் கட்டுமானம் முடிந்து இன்று முதல் கடற்சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

அதற்கு பிறகு ஐந்தாவது மற்றும் ஆறாவது நீர்மூழ்கிகளான ஐஎன்எஸ் வகிர் மற்றும் ஐஎன்எஸ் வக்ஷீர் இறுதி கட்ட கட்டுமானத்தில் உள்ளது. இந்தியாவின் நீரடி பிரிவு பலம் குறைந்த நேரத்தில் கடந்த 2005ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் இந்த புதிய ஆறு நீர்மூழ்கிகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP