‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்’

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 | 

‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்’

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

72-வது சுதந்திரதினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, முதன்முறையாக நேற்று தேசியக்கொடி ஏற்றபட்டது. லடாக், ஜம்மு-காஷ்மீர் மக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவரது பேட்டியில் மேலும், ‘காஷ்மீரில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கி வருகின்றன; பள்ளிகள் திங்கள்கிழமை முதல் செயல்படும். ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு வசதிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன; கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்படும்’ என்றும் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்திருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. காஷ்மீர் குறித்து ஐ. நா. சபையில் இன்று இரவு ஆலோசனை நடைபெறும் நிலையில் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP