பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது: பிபின் ராவத்

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பாலகோட் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமை மீண்டும் பாகிஸ்தான் சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில்  இன்று நடைபெற்ற இளம் ராணுவ வீரர்களுக்கான புதிய பிரிவு தொடக்க விழாவில் கலந்து கொண்ட இந்திய  ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடடியா, பாகிஸ்தானில்  பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின்  பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்களை இந்திய விமானப்படை அழித்தது.

அந்த முகாம் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளதாகவும் அதற்கு உறுதுணையாக பாகிஸ்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழையவிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP