காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீரில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 | 

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீரில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் (sopore) என்ற பகுதியில் தீவிரவாதிகள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதால் அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP