ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாத தாக்குதல்: 2 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஆரிஹல்(Aarihal) என்ற பகுதிக்கு அருகே ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுளளனர். இந்த தீவிரவாத தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
 | 

பின்னர் உடனடியாக அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள 92 பேஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்றும் இதேபோன்று ராணுவ வீரர்கள் சென்ற கார் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. மொத்தமாக 18 ராணுவ வீரர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

இதனால் காஷ்மீர் முழுவதுமே பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP