போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே குடிபோதையில் நண்பனிடம் வீடியோ கால் பேசியபடியே தூக்கில் தொங்குவது போல் விளையாட்டு காட்டிய நபர், கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.
 | 

ஆந்திர மாநிலம் திருச்சானூர் இந்திரா காலனியைச் சேர்ந்த ஷங்கர், தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த இவா் மது அருந்தியுள்ளார்.

மது போதையில் தனது அறையில் இருந்தவாறே திருப்பதியில் இருக்கும் நண்பனுக்கு வீடியோ கால் செய்த அவர், தான் தூக்கில் தொங்கப்போவதாக விளையாட்டாகக் கூறியதாகத் தெரிகிறது.

நண்பன் வேண்டாம் என்று தடுத்தும் கேட்காமல், மின்விசிறியில் சேலையைக் கட்டி, தூக்கில் தொங்குவதுபோல் பாவனை செய்துள்ளார் ஷங்கர். சிறிது நேரத்தில் அருகில் இருந்த கட்டில் மீது கால்வைத்து எழ முயன்ற அவரை மதுபோதை தடுக்கவே கால் இடறி, கழுத்து இறுக்கி உடனடியாக அவாின் உயிர் பிரிந்தது.

எதிர்முனையில் இருந்த நண்பர், உடனடியாக அடுத்த அறையில் இருந்த ஷங்கரின் பெற்றோரை அழைத்து விஷயத்தை கூறவே, அவர்கள் வந்து ஷங்கரை சடலமாக மீட்டனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP