மாணவியை 168 முறை அறைய உத்தரவிட்ட ஆசிரியர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்து வராத மாணவியை சக மாணவிகள் கொண்டு 168 முறை கன்னத்தில் அறைய உத்தரவிட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
 | 

மாணவியை 168 முறை அறைய உத்தரவிட்ட ஆசிரியர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்து வராத மாணவியை சக மாணவிகள் கொண்டு 168 முறை கன்னத்தில் அறைய உத்தரவிட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் தண்டாலா டவுன் பகுதியில் உள்ள ஒரு அரசு  பள்ளியில் 6 ம் வகுப்பில் மாணவி ஒருவர் கடந்த ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் 10 நாட்களுக்கு பள்ளிக்கு செல்லவில்லை.

10 நாட்களுக்கு பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவியை தண்டிக்க நினைத்த ஆசிரியர் விநோத தண்டனையை அறிவித்தார். அதன்படி உடன் படிக்கும் மாணவிகள் 14 பேர் தினமும் அந்த மாணவியை இரண்டு முறை கன்னத்தில் தொடர்ந்து 6 நாட்கள் அறைய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் பின் வீட்டுக்கு சென்ற பாதிக்கப்பட்ட மாணவியின் போக்கில் மாற்றம் ஏற்படவே அவரின் தந்தை சிவ் பிரதாப் சிங் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார்.

அதன் பேரில் பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் ஆசிரியரின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியர் உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதே வேளையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி பள்ளி செல்லவே மறுத்து விட்டார்.

இதனால் பெரும் மனஉளைச்சலடைந்த சிவ் பிரதாப் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இந்த வழக்கு தண்டாலா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆசிரியரை கைது செய்து செய்ய உத்தரவிட்டது.

மேலும் அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியரே தவறாக எடுத்த நடவடிக்கையால் ஒரு மாணவியின் படிப்பு கேள்விகுறியானது மட்டுமல்லாமல் ஆசிரியரும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP