கர்நாடகா நட்சத்திர ஓட்டலில் வரித்துறை அதிரடி ரெய்டு

கர்நாடக மாநிலம் பல்லாரியில், காங்கிரஸ் எம்எல்ஏ தங்கியிருக்கும், நட்சத்திர ஓட்டலில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சாேதனை நடத்தினர். அங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

கர்நாடக மாநிலம் பல்லாரியில், தனியாருக்கு சொந்தமான பிரபல நட்சத்திர ஓட்டலில், காங்கிரஸ் எம்எல்ஏ அனில் லாட் தங்கியிருந்தார். அந்த ஓட்டலில், கணக்கில் வராத பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, அங்கு அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கையப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில், காங்., எம்எல்ஏ., தங்கியிருந்த ஓட்டலில் நடத்தப்பட்ட சாேதனை, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP