3 நாட்களில் தட்கல் பாஸ்போர்ட்! பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள பெறப்படும் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஆர்டினரி மற்றும் தட்கல் முறை. வழக்கமான 'ஆர்டினரி' முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் .
 | 

3 நாட்களில் தட்கல் பாஸ்போர்ட்! பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள பெறப்படும் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஆர்டினரி மற்றும் 'தட்கல்' முறை. வழக்கமான 'ஆர்டினரி' முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் .

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்த பின்னர், உயர் அதிகாரிகள் வழங்கும் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்களுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கான கலந்தாய்வு நாள் கொடுக்கப்படும். அந்நாளில், நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 1500. மேலும், காவல்துறை சார்பில் சரிபார்ப்பு நடைபெறும். சுமார் 30 முதல் 45 நாட்களுக்குள்ளாக பாஸ்போர்ட்டை பெற முடியும். 

ஆனால், அவசர வெளிநாட்டு பயணங்களுக்காக எளிமையான முறையிலும், மிகவும் விரைவாகவும் பாஸ்போர்ட் வசதியை பெற 'தட்கல்' பாஸ்போர்ட் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

3 நாட்களில் தட்கல் பாஸ்போர்ட்! பெறுவது எப்படி?

வழக்கமாக பாஸ்போர்ட் பெறுவதற்கு நாம் விண்ணப்பித்து 45 முதல் 60 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, இந்த தட்கல் பாஸ்போர்ட் முறையில் ஒரு சில வாரங்களுக்கு உள்ளாகவே நாம் பாஸ்போர்ட்டை பெற முடியும். சான்றிதழ்களில் பிழை ஏதேனும் இல்லாத பட்சத்தில் ஒரு நாளிலே உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க வழிவகை செய்யப்படும். அதாவது நீங்கள் விண்ணப்பித்த நாள் தவிர அதற்கு அடுத்த நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பித்த மூன்றாம் நாள் உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும். காவல்துறை சரிபார்ப்பு (போலீஸ் வெரிபிகேஷன்) இருந்தால், அதற்கு ஒருநாள் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக, நாம் செய்யவேண்டியது பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்துடன், தேவையான சான்றிதழ்களை இணைத்தால் போதுமானது. ஆதார் எண்/ஆதார் மின்னணு பதிவு அட்டை மற்றும் இணைப்பு படிவம் - E ஆகியவற்றுடன் அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும். ஆனால், வழக்கமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு ஆகும் தொகையை விட தட்கல் பாஸ்போர்ட் முறைக்கு விண்ணப்பக் கட்டணம் அதிகம். தட்கல் முறை விண்ணப்பக்கட்டணம் ரூ.2,000.

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP