பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 | 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கின் முந்தைய விசாரணையில், " மத்திய அரசிடம் அனுமதி பெற்று தான் ராஜிவ் கொலையாளிகளை  விடுவிக்க முடியும்" என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. மேலும் இந்த விவகாரத்தில், ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 

இதையடுத்து, ராஜிவ் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP