நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமித் ஷா உத்தரவு!!!

இடது சாரி பயங்கரவாதம் மற்றும் நகர்ப்புற நக்சலிசம் இரண்டிற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் போலிஸ் படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
 | 

நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமித் ஷா உத்தரவு!!!

இடது சாரி பயங்கரவாதம் மற்றும் நகர்ப்புற நக்சலிசம் இரண்டிற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் போலிஸ் படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய ரிசர்வ் போலிஸ் படையினரின் தலைமையகத்தில் வைத்து அவர்களுடன் உரையாடல் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான அமித் ஷா, இடது சாரி பயங்கரவாதம் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் தொந்தரவுகள் அதிகரித்து வருவதால், அடுத்த 6 மாதத்திற்குள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர்களிடமிருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், இடது சாரி பயங்கரவாதிகளின் நடமாட்டங்கள் தெரியும் பகுதிகளில் சாலை வசதிகளும் மருத்துவ வசதிகளும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல், நகர்ப்புற நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு, பி.வராவர ராவ், கௌதம் நவலேகா, வெர்னான் கோன்சேல்வ்ஸ், அருண் பெரைரா உட்பட பல நகர்ப்புற நக்சல்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த. சுரேந்திரா கேட்லிங், நாக்பூர் பல்கலைகழக பேராசிரியர் ஷோமா சென், மகேஷ் ராவுத், ரோனா வில்சன், சுதிர் தவாலே ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு இடையூராகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வரும் இடது சாரி பயங்கரவாதிகள், நகர்ப்புற நக்சல்கள் மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மேலும், யூனியன் பிரதேசங்களாக தற்போது பிரிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் பாதுகாப்பு படைகளை பலப்படுத்துமாறு கூறிய அவர், மக்களின் பாதுகாப்பிற்காக கடும் குளிரென்றும் பாராமல் பணியாற்றும் பாதுகாப்பு படையினருக்கு தக்க மருத்துவ வசதிகளும் அமைத்து தரப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP