ஹெல்மெட் அணியாதவர்களுக்கு இனிப்பு வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் மணிப்பூர் போக்குவரத்துத் துறை போலீசார்.
 | 

இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு நாடு முழுவதுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் சென்று ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே, இதைத் தடுக்க பல்வேறு முறைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், மணிபூர் போக்குவரத்துத் துறை போலீசார் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாசமான ஒரு முறையைக் கையாண்டுள்ளனர்.  அதன்படி, சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வருவோர் ஹெல்மெட் அணியாமல் வருவோரை தடுத்து நிறுத்தி சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்மூலம், மக்கள் தாங்களே உணர்ந்து ஹெல்மெட் அணிந்து வருவது அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட போக்குவரத்துத் துறை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்கள் மத்தியிலும் இது ஒரு வித்தியாசமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP