அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு சு.சுவாமி கடிதம்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 | 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு சு.சுவாமி கடிதம்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான 67 ஏக்கர் நிலம் தற்போது மத்திய அரசு வசம் உள்ளது. எனவே, ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை.

1993ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்,  ராம பிரானின் பக்தர்களும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் இணைந்து ராமர் கோவில் கட்டுவதெற்கென விலைக்கு வாங்கி வைத்திருந்த அயோத்தி நிலத்தை கையகப்படுத்தினார்.

எனவே,  பக்தர்கள் ராமனுக்கு கோவில் கட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசு கையப்படுத்தி வைத்துள்ள அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து, உடனடியாக அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை வேண்டும். 

மேலும், செய்து தமிழகத்தின் ராமேஸ்வரத்தையும் இலங்கையையும் இணைக்கும் விதமாக ஸ்ரீராமபிரானால் கட்டுப்பட்டது என்று நம்பப்படும் ராம சேது என்று அழைக்கப்படும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாகவும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP