சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: தலைவர்கள் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 | 

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: தலைவர்கள் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா 1953ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார். அங்கேயே தனது பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். 1973ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இவர் இளம் வயதிலேயே (1977-82) ஹரியானா மாநில அமைச்சராக பதவி வகித்தார். 7 முறை மக்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார். 

இந்த ஆண்டு மே மாதம் வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வந்த சுஷ்மா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதவி ஏற்றபோது, உடல்நல குறைவு காரணமாக பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.  இந்நிலையில், நேற்றிரவு மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP