பட்டாசுக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

காற்று மாசு காரணமாக நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்க வேண்டும் வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 | 

பட்டாசுக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

பட்டாசுக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இதை எதிர்த்து சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சில பட்டாசு விற்பனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பட்டாசுக்குத் தடை விதித்தால், தங்கள் பகுதியில் உள்ள ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். 

தொடர்ந்து, இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ தடை இல்லை என்றும் வருகிற தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 

பட்டாசுக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதே நேரத்தில், நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளனர். அதாவது, 

►  குறைவான புகையை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

►  லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டும்.

►  ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது.

►  இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க வேண்டும்.

►  பட்டாசு குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 

► பட்டாசு விற்பனைக்கான விதிமுறைகளை அதன் விற்பனையாளர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

►  விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP