Logo

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை விலக்கியது உச்ச நீதிமன்றம்!

கொல்கத்தா நகரின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டிக்க மறுத்துள்ளதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 | 

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை விலக்கியது உச்ச நீதிமன்றம்!

கொல்கத்தா நகரின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டிக்க மறுத்துள்ளதையடுத்து, அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையராக பதவி வகித்த ராஜீவ் குமாரை விசாரிக்க, சிபிஐ முயன்ற நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதனை தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கைது செய்யக் கூடாது என்றும், அவர் தானாக சிபிஐ முன் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதன்படி, ராஜீவ் குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், கடந்த மே 17ல்  இது தொடர்பான வழக்கின் விசாரணையில், அவரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும், அவர் ஏழு நாட்களுக்குள், உரிய நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 

நீதிமன்றம் அளித்த ஒரு வார காலம் முடிந்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் விலக்கியுள்ளது. இதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP