போலீஸ் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, டெல்லி கமிஷனருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ்!!!

டெல்லி : டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வைத்து, காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பை தொடர்ந்து, டெல்லி உயர் கமிஷனர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை தடுக்காமல் இருந்ததாக காவல் ஆணையர் அமுல்யா பட்னாயக் மீது குற்றம் சுமத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வருண் தாக்கூர்.
 | 

கடந்த வெள்ளிக்கிழமையன்று, நீதிமன்ற வளாகத்தில் வண்டி நிறுத்துவது தொடர்பாக காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தொடங்கிய வார்த்தை தகராறு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் காவல் துறையினருக்கு மதிப்பளிப்பதில்லை என்று குற்றம் சுமத்திய காவல் துறையினர்  டெல்லி உயர் கமிஷனர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமுல்யா பட்னாயக் பலமுறை கூறியும் போராட்டத்தை கைவிட மறுத்த காவல் துறையினர், துணை கமிஷனர் (தெற்கு) தேவேஷ் ஸ்ரீவத்ஸாவின் வாக்குறுதியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட சம்மதம் தெரிவித்தனர்.

போலீஸ் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, டெல்லி கமிஷனருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ்!!!

இந்நிலையில், காவல்துறை சட்டம் பகுதி 3(1) (a) (b) (c) மற்றும் 3(2) ஆகிய சட்டங்களின் கீழ், காவல்துறையினர் தங்களின் விருப்பு வெறுப்புகளை பத்திரிகையாளர்கள் முன் தெரிவிப்பதும், போராட்டத்தில் ஈடுபடுவதும் தவறு என்பதால், அவர்களின் போராட்டத்தை தடுக்க முயன்ற குற்றத்திற்காக அமுல்யா பட்னாயக் மீது வழக்குபதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வருண் தாக்கூர் அண்ட் அசோசியேட்ஸ்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP