உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது!

ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.
 | 

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது!

ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. 

நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் தற்போது அனைத்து மக்களுக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு வசதியாக அந்தந்த பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே சட்ட அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். 

அதன்படி, முதற்கட்டமாக இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, அசாமி, ஒடியா ஆகிய 6 மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அதன் தொடர்ச்சியாக மற்ற மாநில மாெழிகளிலும் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது!

மேற்குறிப்பிட்ட பட்டியலில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்று தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, அசாமி, ஒடியா உள்ளிட்ட மொழிகளில் தீர்ப்பின் நகல்கள் வெளியான நிலையில் இன்று முதல்முறையாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. 

சமீபத்தில், கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் ராஜகோபால் வழக்கின் தீர்ப்பு உள்ளிட்ட 2 வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP