தன்பாலின உறவு குற்றம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தன்பாலின உறவு விவாகரத்தில் இந்திய சட்டப்பிரிவு 377யை நீக்கக்கோரும் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அந்த சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.
 | 

தன்பாலின உறவு குற்றம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தன்பாலின உறவாளர் விவாகரத்தில் இந்திய சட்டப்பிரிவு 377யை நீக்கக்கோரும் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

சட்டப்பிரிவு 377 என்பது இயற்கை விதிமுறைகளுக்கு மாறாக உடலுறவு கொள்வது சட்டத்திற்கு எதிரானது என்பதை வரையறுக்கிறது. அதன்படி, தன்பாலின உறவில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வழிவகை செய்யலாம். இந்நிலையில் இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது.

கடந்த ஜூலை 17ம் தேதி இந்த வழக்கு மீதான அனைத்து வாதங்களும் முடிவுற்ற நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டப்பிரிவு 377யை நீக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

கடந்த 2009ல், சட்ட பிரிவு 377 பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி, 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பாலியல் உறவில் ஈடுபடலாம் என தீர்ப்பளித்தது. ஆனால் இதற்கு எதிராக இந்து, முஸ்லீம் அமைப்புகள் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 

இதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். அவரவர் உணர்வுகள் மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது. அரசியல் சாசன சமநிலை என்பது எண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். மேலும் தன்பாலின உறவு குற்றமல்ல என்று கூறிய நீதிபதிகள், சட்டப்பிரிவு 377ஐ நீக்கி உத்தரவிட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP