உ.பி வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, புறாவின் புகைப்படங்கள்; அதிர்ச்சியில் மக்கள்!

உ.பி வாக்காளர் பட்டியலில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பறவைகள், விலங்குகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

உ.பி வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, புறாவின் புகைப்படங்கள்; அதிர்ச்சியில

உ.பி வாக்காளர் பட்டியலில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பறவைகள், விலங்குகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர்கள் நீக்கம் என பணிகள் முடிந்து இணையத்தில் இறுதி பட்டியல் வெளியிடும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்திலும், இறுதி வாக்காளர் பட்டியல் சஇணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், வாக்காளர் அட்டையில் உள்ள படங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துர்காவதி என்ற 51 வயது பெண்ணின் படத்திற்கு புகைப்படத்திற்கு பதில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் படம் இடம்பெற்றுள்ளது.

இதே போன்று முன்னாள் மத்திய அமைச்சர் நாரத் ராய் பெயருக்கு அருகே யானையின் படமும், குன்வார் அன்குர் சிங் என்பவரின் புகைப்படத்திற்கு பதில் மான் படமும், மற்றொரு பெண் ஒருவரின் பெயருக்கு அருகில் புறா படமும் இடம் பெற்றுள்ளது. 

பின்னர் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்ட போது, " இந்த வாக்காளர் பட்டியலை தயாரித்த கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பணியில் சேர்ந்து 20 நாட்கள் தான் ஆகின்றன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள தவறுகள் திருத்தப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP