சுனந்தா புஷ்கர் வழக்கு: சஷி தரூருக்கு முன்ஜாமீன்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சஷி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கியது.
 | 

சுனந்தா புஷ்கர் வழக்கு: சஷி தரூருக்கு முன்ஜாமீன்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சஷி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கியது. 

முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டனர்.

சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இவ்வழக்கில் சசி தரூர் மீது போலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சஷி தரூருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் சசி தரூர் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டத.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சஷி தரூர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP