ஆர்.டி.‌ஐ ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற உதவும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையர்கள் நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.
 | 

ஆர்.டி.‌ஐ ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற உதவும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்பட 11 ஆணையர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளில், இந்த விவகாரம் சுட்டி காட்டப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கையாளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, புதிதாக மேலும் 4  தகவல் ஆணையர்களை நியமித்து மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர் பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவிக்கான புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP