12 எம்.எல்.ஏ.,க்கள் திடீர் ராஜினாமா: ஆட்சிக்கு ஆபத்து?

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் - ம.ஜ.த கட்சி எம் .எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர்.
 | 

12 எம்.எல்.ஏ.,க்கள் திடீர் ராஜினாமா: ஆட்சிக்கு ஆபத்து?

கர்நாடக முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் - ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர்.

கர்நாடகாவில் 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தும், பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி உருவானது. 

அதன்படி, கர்நாடகாவின் முதல்வராக ம.ஜ.த சார்பில் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வராவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணியை கலைக்க பாஜக சதி வேலைகளில் ஈடுபடுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். 

தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் தனங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து கூட்டணியில் சில குழப்பங்களும் நிலவி வந்தது. 

இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் இல்லாத சமயத்தில், காங்கிரஸ் - ம.ஜ.த கட்சி எம் .எல்ஏக்கள் 12 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர். இதில் 11 பேரின் (காங்கிரஸ் -8, மஜத -3) ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இன்னும் சில எம்.எல்.ஏக்கள் பதவி விலகும் பட்சத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி கலையும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் குமாரசாமி அமெரிக்கா சென்றுள்ளதாகவும், நாளை தான் அவர் சொந்த ஊருக்கு திரும்புவதாகவும் தகவல் உள்ளது. 

கர்நாடக பேரவையில் தற்போதைய நிலை:

மொத்தமுள்ள இடங்கள் -> 224

காங்கிரஸ் - மஜத கூட்டணி -> 118  (காங் - 79, மஜத -37, பிற -2)

பாஜக கூட்டணி - 106 (பாஜக -105; பிற -1)

பெரும்பான்மைக்கு தேவை : 113

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP