வலுவடைந்த 'வாயு புயல்' நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

அரபிக்கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 | 

வலுவடைந்த 'வாயு புயல்' நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

அரபிக்கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்றுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள வாயு புயல் நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 140 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP