புயல் எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வாயு புயல் கரையை கடப்பதை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
 | 

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், 24 - 48 மணி நேரத்தில், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ஜ் பகுதிகளை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் முன்னோட்டமாக, வல்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ரூபானி உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்காெள்ளப்பட்டு வருகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP