ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலையை சரிசெய்ய நடவடிக்கைகள்: நிர்மலா சீதாராமன் பேட்டி!

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் மந்தநிலையை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 | 

ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலையை சரிசெய்ய நடவடிக்கைகள்: நிர்மலா சீதாராமன் பேட்டி!

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் மந்தநிலையை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, "தற்போது ஆட்டோ மொபைல் வாங்குவதை விட ஓலா அல்லது உபர் கால் டாக்சிகளைப் பயன்படுத்தவே மக்கள் விரும்புகிறார்கள் என்று பத்திரிகை ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆட்டோமொபைல் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டது. பயணிகள் கார் விற்பனை 41.09% குறைந்துள்ளது. பி.எஸ்-6 உமிழ்வு விதிமுறைகள் மற்றும் மக்கள் கால் டாக்சிகளை அதிகம் உபயோகப்படுத்தியதன் காரணமாகவே துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வாகன விற்பனை கடந்த மாதம் 18,21,490 ஆக இருந்தது, இந்தாண்டு 36 யூனிட்டுகளில் இருந்து 23.55 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு, ஏப்ரல் 1, 2020 முதல் எந்தவொரு பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) IV வாகனம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிஎஸ்- 6 உமிழ்வு காற்று மாசுபாட்டின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தரநிலைகள் உள்ளன. 

மின்சார கார் விற்பனையை அதிகரிக்க சலுகை வழங்கப்படுகிறது.. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து நிதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. புதிய வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த மாத இறுதியில் கோவாவில் கூடும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கார்கள் மீதான வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP