நிலைபாட்டில் உறுதியாக இருங்கள் - கிரண் பேடி அறிவுரை!!

டெல்லி பிரதேச காவல் ஆணையராக மீண்டும் கிரண் பேடி நியமிக்கப்பட வேண்டும் என்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர் முழக்கங்கள் எழுப்பி வருவதை தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் கிரண் பேடி, நிலைபாடு என்னவாக இருந்தாலும், அதில் உறுதியாக இருக்குமாறு அறிவுரித்தியுள்ளார்.
 | 

நிலைபாட்டில் உறுதியாக இருங்கள் - கிரண் பேடி அறிவுரை!!

டெல்லி பிரதேச காவல் ஆணையராக மீண்டும் கிரண் பேடி நியமிக்கப்பட வேண்டும் என்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர் முழக்கங்கள் எழுப்பி வருவதை தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் கிரண் பேடி, நிலைபாடு என்னவாக இருந்தாலும், அதில் உறுதியாக இருக்குமாறு அறிவுறித்தியுள்ளார்.

டெல்லி பிரதேசத்தில், காவல் துறையினரை அவமதிக்கும் ரீதியிலான வழக்கிறிஞர்களின் செயல்களினால் அதிருப்தியடைந்துள்ள காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, இது போன்ற பல சமயங்களில் அவர்களுக்கு முழு ஆதரவு அளித்து வழிநடத்தி வந்த முன்னாள் காவல்துறை ஆணையரான கிரண் பேடியை மீண்டும் ஆணையராக நியமிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர் காவல் துறையினர். 

இந்நிலையில், இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கிரண் பேடி, பத்திர்கையாளர்களை சந்தித்தபோது தான் பதவியில் இருந்த போது நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த 1988 ஆம் ஆண்டு, நான் டிசிபி ஆக இருந்த சமயத்தில், திருட்டு வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரை கைது செய்ய நேர்ந்தது. அதற்கு எதிராக பல வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, என்னை பணி நீக்கம் செய்ய வேண்டி முழக்கங்கள் எழுப்பினர். ஆனால் என்னுடைய தலைமை அதிகாரி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், நானும் எனது தரப்பில் உறுதியாக இருந்தேன். எனவே, நம் பக்கம் நியாயம் இருக்கும் போது, நம் நிலைபாட்டிலும் நாம் உறுதியாக நிற்க வேண்டும். இதை தான் தற்போது  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி  காவலர்களுக்கு நான் கூற விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் காவல் துணை ஆணையரும், புதுச்சேரி பிரதேசத்தின் தற்போதைய லெப்டினன்ட் ஆளுநருமான கிரண் பேடி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP