இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துணை குடியரசுத் தலைவர் இரங்கல்

இலங்கையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகவும் வருந்தத்தக்கதாகவும் இருப்பதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துணை குடியரசுத் தலைவர் இரங்கல்

இலங்கையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இச்சம்பவம் மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாகவும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற கொண்டிருந்த தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர விடுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  இதில், தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இந்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்,  தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகவும் வருந்தத்தக்கதாகவும் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கவனித்து வருவதாக கூறியதுடன், அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

இலங்கை குண்டுவெடிப்பு: பலி 100யைத் தாண்டியது; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP