இலங்கை குண்டுவெடிப்பு : அவசர உதவி எண்களை அறிவித்தது வெளியுறவு அமைச்சகம்

இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட் செய்துள்ளார். மேலும் அங்கிருக்கும் இந்தியர்களுக்காக தற்போது உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
 | 

இலங்கை குண்டுவெடிப்பு : அவசர உதவி எண்களை அறிவித்தது வெளியுறவு அமைச்சகம்

இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அங்கிருக்கும் இந்தியர்களுக்காக தற்போது உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோா் உயிாிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தொிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தூதரக அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அங்கு இருக்கும் இந்தியர்கள் உதவிகளை பெறுவதற்காக, அவசர தொடர்பு எண்களையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்கையில் தூதரக உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் தொடர்பு கொள்ள வசதியாக இந்த உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..

இலங்கையில் உள்ள இந்தியர்கள் +94 777903082, +94 112422788, +94 112422789, +94 777902082, +94 772234176 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP