அயோத்தி வழக்கு மத்தியஸ்தர் குழுவில் ஆன்மிக குருவா?... அலறும் ஓவைசி !

அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை எட்டுவதற்காக, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றுள்ளதற்கு, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 | 

அயோத்தி வழக்கு மத்தியஸ்தர் குழுவில் ஆன்மிக குருவா?... அலறும் ஓவைசி !

அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை எட்டுவதற்காக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றுள்ளதற்கு, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின்  தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை எட்டுவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம். கலிபுல்லா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இக்குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,  மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், சமரசத் தீர்வு குழுவின் உறுப்பினராக  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின்  தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, " அயோத்தி விவகாரம் குறித்து  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்  முன்பு ஒருமுறை பேசும்போது, 'அயோத்தி விஷயத்தில் முஸ்லிம்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது. அப்படி கோரினால் இந்தியா மெல்ல மெல்ல சிரியா ஆகிவிடும். அதாவது கலவர பூமி ஆகிவிடும்' எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவரை மத்தியஸ்தர் குழுவின் உறுப்பினராக நியமித்துத்துள்ளது சரியானதாக தெரியவில்லை. அவருக்கு பதிலாக நடுநிலையாளர் ஒருவரை இக்குழுவில் சேர்க்க வேண்டும்" என்று ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP