பாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் 

MeToo விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் தங்களிடம் வரும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாக குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 | 

இது தொடர்பாக அவர் தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கட்சிகளுக்குள் நடக்கும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாக குழுக்கள் அமைத்து அந்த புகார் மற்றும் நடவடிக்கை குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மத்தியஅமைச்சர் மேனகா காந்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். அதன் முயற்சியாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி, கட்சிகளுக்குள் நடக்கும் பாலியல் சம்பவங்களைத் தடுக்கவும், விசாரிக்கவும் தனிக் குழுக்கள் அமைக்கக் கேட்டுக்கொண்டுள்ளேன். அனைத்துத் தனியார் அமைப்புகளிலும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனி குழுக்கள் இருக்கும் போது, ஏன் அரசியல்கட்சிகளுக்குள் குழு ஏற்படுத்தக்கூடாது'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேனகா காந்தி 6 தேசிய கட்சிகளுக்கும், 59 மாநில கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

இதே போல பாலிவுட்டுக்கு கடிதம் எழுதிய மேனகா காந்தி, அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாக குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP