சோனியா பாதுகாப்பில் அரசியல் இல்லை: ஜே.பி. நட்டா

சோனியா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் எந்தவிதமான அரசியலும் இல்லை என பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
 | 

சோனியா பாதுகாப்பில் அரசியல் இல்லை: ஜே.பி. நட்டா

சோனியா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் எந்தவிதமான அரசியலும்  இல்லை என பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா, கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப அளிக்க வேண்டும் என்றும், எங்கள் தலைவர்களின் பாதுகாப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, சோனியா, மன்னேமாகனுக்கு முன்பு இருந்த அச்சுறுத்தல் இப்போதில்லை என்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது இல்லாததால் சோனியாவுக்கு எஸ்.பிஜி பாதுகாப்பு தேவையில்லை எனவும் கூறினார். 

இதை தொடர்ந்து பேசிய பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா, சோனியா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் எந்தவிதமான அரசியலும்  இல்லை என்று கூறினார். மேலும், பாதுகாப்பு குறித்து அரசியல்வாதிகள் முடிவுசெய்வதில்லை. உள்துறை அமைச்சகத்தால் முடிவு செய்யப்படுவதாகவும், எந்த அளவு அச்சுறுத்தல் உள்ளது என்பதன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதும் மற்றும் திரும்ப பெறப்படுவது குறித்து முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP