திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு

டெல்லி திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர்.
 | 

திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு

டெல்லி திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர். 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி கூறிய நிலையில், தற்போது ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்து  பேசினார். அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் ப.சிதம்பரத்தை சந்தித்தார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரை சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP