என் மீது சிலருக்கு கோபம்: மோடி கிண்டல்

ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமடைய செய்துள்ளது என, பிரதமர் மோடி கிண்டலாக தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் "ஒன்றுபட்ட இந்தியா" என்ற பெயரில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்று வருகிறது.
 | 

என் மீது சிலருக்கு கோபம்: மோடி கிண்டல்

ஊழலுக்கு எதிரான தமது கடும் நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமடையவும், என் மீது அவர்களை கோபப்படவும் செய்துள்ளது என, பிரதமர் மோடி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் "ஒன்றுபட்ட இந்தியா" என்ற பெயரில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்று வருகிறது.

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும்  நோக்கில் நடைபெறும் இந்தப் பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு,  சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் இப்பேரணி குறித்து கூறியது:
ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் கடும் நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமடைய செய்துள்ளது. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுப்பவர்கள் மீது, அச்செயலில் ஈடுபடுவோருக்கு கோபம் வருவது இயல்புதான்.

அவ்வாறு கோபமடைந்துள்ளவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தற்போது, மகா கூட்டணி என்ற பெயரில் பேரணி நடத்தி வருகின்றனர் என மோடி விமர்சித்துள்ளார்.

newstm.in
 

எதிர்க்கட்சிகளின் இப்பேரணி குறித்து பிரதமர் மோடி கூறும்போது, "ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் கடும் நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமடைய செய்துள்ளது. அவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தற்போது பேரணி நடத்தி வருகின்றனர்" என அவர் விமர்சித்துள்ளார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP