மேற்கு வங்கத்தில் சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாப்புப்படை வீரர்! ஒருவர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 | 

மேற்கு வங்கத்தில் சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாப்புப்படை வீரர்! ஒருவர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுராவில் பக்னான்(Bagnan) என்ற இடத்தில் உள்ள அசாம் ரிபைள் பாதுகாப்புப்படை தளத்தைச் சேர்ந்த வீரர்கள் வருகிற மே 6ம் தேதி நடைபெற உள்ள 5ஆம் கட்ட மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், இன்று ஹவுராவில் உள்ள பாதுகாப்புப்படையில் வீரர் ஒருவர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் லக்ஷ்மி கந்த பர்மன்(Lakshmi Kanta Burman) என்பது தெரிய வந்துள்ளது. அவர் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP