ட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா?

கத்துவா விவகாரத்தில் நிதி திரட்டிய சர்ச்சையில் சிக்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் யூனியன் துணைத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத், ட்விட்டரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
 | 

ட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா?

கத்துவா விவகாரத்தில் நிதி திரட்டிய சர்ச்சையில் சிக்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் யூனியன் துணைத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத், ட்விட்டரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஜெ.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர் யூனியன் துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத், சமூக வலைத்தளங்களில், பிரதமர் மோடியையும் மத்திய அரசையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தொடர்ந்து விமர்சித்து வருபவராவார்.  காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் குடும்பத்திற்காக நிதி திரட்ட ஷெஹ்லா ரஷீத் தலைமையில் முயற்சி எடுக்கப்பட்டது. கத்துவா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கும், உ.பி-யின் உன்னவோ பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும், 40 லட்ச ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டப்பட்டதாக ரஷீத் தெரிவித்திருந்தார். 

ஆனால், பலியான சிறுமியின் குடும்பத்திற்கு எந்த நிதியும் செல்லாததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிறுமியின் தந்தை, அந்த வழக்கு தொடர்பாக பயணிக்க, தனது ஆடு, மாடுகளை விற்று வருவதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, இதற்காக திரட்டிய நிதி ஷெஹ்லா ரஷீத் உள்ளிட்டோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தாங்கள் திரட்டிய நிதி, அந்த குடும்பத்தினரை சென்றடைந்ததாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டனர். 

சமீபத்தில், அயர்லாந்து நாட்டை சேர்ந்த பாடகி சின்ஹெட் ஓ.கானர், இஸ்லாமிய மதத்திற்கு மாறியதை ஷெஹ்லா வரவேற்று ட்வீட் பதிவு செய்தார். மார்க்சிச, இடதுசாரி கொள்கைகளை கடைபிடித்து வரும் ஷெஹ்லா, அடுத்த தேர்தலில் நிற்கவுள்ளதாகவும், இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை பெறுவதற்காக, தன்னை இஸ்லாமியராக அடையாளம் காட்டிக் கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு ஆதரவான பலரே, ரஷீத் மீது கடும் விமர்சனங்களை எழுப்பினர். 

இந்நிலையில், ட்விட்டரில் இருந்து ஷெஹ்லா விலகியுள்ளார். கடைசியாக, "8 வருடங்களாக ட்விட்டரில் இருந்த நான், தற்போது விலகுகிறேன். விவாதிக்கவும், விளக்கம் கொடுக்கவும், விலகிச் செல்லவும் முயற்சித்தேன். ஆனால், மிகவும் மோசமான ஒரு சூழல் இங்கு நிலவி வருகிறது. இதுபோன்ற வெறுப்பு கொண்ட, பொய் சொல்லும், திரித்து பேசும் சூழலில் என்னால் இருக்க முடியாது. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி" என எழுதினார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP