மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஸ்மிரிதி இரானி!

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ஸ்மிரிதி இரானி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
 | 

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஸ்மிரிதி இரானி!

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ஸ்மிரிதி இரானி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது.  அவர்களுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஸ்மிரிதி இரானி!

இதன் தொடர்ச்சியாக மக்களவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ஸ்மிரிதி இரானி நியமிக்கப்பட்டார். அதையடுத்து இன்று காலை அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

ஸ்மிரிதி இரானி உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து, 60 ஆண்டுகள் காங்கிரேசின் வசம் இருந்த அமேதியை தொகுதியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP