கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரை ஒன்பது நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 | 

2017ஆம் ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 8.59 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் , சிவக்குமாரை 9 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 13-ஆம் தேதி வரை அவர் காவலில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP