சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 | 

சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று முன்தினம் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 38 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.  புல்வாமா கொடூரத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதில், இரண்டு தமிழக வீரர்களின் உடலும் இன்று அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த தமிழக வீரரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இதையடுத்து, சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP