பாகிஸ்தானில் சீக்கியப் பெண் கடத்தப்பட்டு மதமாற்றத்திற்கு ஆளாக்க முயற்சி: டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்!

பாகிஸ்தானில் சீக்கியப் பெண் கடத்தப்பட்டு மதமாற்றத்திற்கு ஆளாக்க முயற்சிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
 | 

பாகிஸ்தானில் சீக்கிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு மதமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், அந்தப் பெண்ணை கடத்திய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதை அடுத்து, சீக்கிய குருத்வாரா கமிட்டி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் சீக்கிய அமைப்பினர் இதனை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும், பாகிஸ்தானில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வரும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP