சித்தராமையா - பெண்ணிடம் மைக்கை பறித்த போது துப்பட்டாவும் கையோடு வந்ததால் சர்ச்சை

கேள்வி எழுப்பிய பெண்ணிடம் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மைக்கை பறித்த போது அந்த பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 | 

மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண் ஒருவர் அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் சித்தராமையா ஆவேசமடைந்தார். வாயை மூடிக்கொண்டு கீழே உட்கார் என்று சித்தராமையா கோபத்தில் கத்திய போதும், அந்தப் பெண் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். 

இதனால் பொறுமை இழந்த சித்தராமையா, அந்தப் பெண் கையில் வைத்திருந்த மைக்கை வேகமாக பறித்தார். அப்போது, அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையாவின் கையோடு வந்து விட்டது.

இந்த வீடியோ வெளியாகி சித்தராமையாவுக்கு எதிராக அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP