ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் மன்னிப்பு கோரிய சரத் யாதவ்!

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேவின் உடலமைப்பு குறித்து பேசியதற்காக லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் மன்னிப்பு கேட்டுள்ளார். நான் கூறியது அவரை காயப்படுத்தி இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
 | 

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் மன்னிப்பு கோரிய சரத் யாதவ்!

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேவின் உடலமைப்பு குறித்து பேசியதற்காக லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் மன்னிப்பு கேட்டுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7ம் தேதி சட்டசபை தேர்தலானது நடைபெற்றது. அதற்கு முன்னதாக அம்மாநில சட்டசபை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய லோக்தந்திரிக் ஜனதாதளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ், அம்மாநில பாஜக முதல்வர் வசுந்தரா ராஜேவை கடுமையாக தாக்கினார். மேலும் வசுந்தரா ராஜேவின் உடலமைப்பு குறித்து விமர்சித்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதை கண்டித்து வசுந்தராவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து, இது குறித்து சரத் யாதவ், "ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் அறிக்கையை பார்த்தேன். எனக்கு, அவரது குடும்பத்தினருடன் நீண்ட கால குடும்ப உறவு உள்ளது. நான் கூறியது அவரை காயப்படுத்தி இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து அவருக்கு நான் பதில் கடிதம் அனுப்புகிறேன்" என கூறியுள்ளார். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP