மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 95. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராம் ஜெத்மலானியின் உயிர் பிரிந்தது.
 | 

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 95. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராம் ஜெத்மலானியின் உயிர் பிரிந்தது.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் சிக்கார்பூரில் பிறந்த ராம் ஜெத்மலானி சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பிறகு, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், இந்திரகாந்தி, ராஜீவ் காந்தி கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய சட்ட நிபுணரான ராம் ஜெத்மலானி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட வழக்குகளிலும் வாதாடியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP