புல்வாமாவில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கான கல்விச் செலவை ஏற்கிறேன்:சேவாக் அறிவிப்பு!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் குழந்தைகளுக்கு, தனது சர்வதேச பள்ளியில் இலவச கல்வி அளிக்க தயாராக இருப்பதாக கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 38 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.  புல்வாமா கொடூரத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது பாகிஸ்தானை மையமாக கொண்ட அமைப்பாகும். 

இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா.சபையைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் உள்பட கண்டனம் தெரிவித்துள்ளன. 

புல்வாமாவில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கான கல்விச் செலவை ஏற்கிறேன்:சேவாக் அறிவிப்பு!

நேற்று ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து இன்று வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

உயிரிழந்த வீரர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளார். சேவாக்குக்கு சொந்தமாக ஹரியானா மாநிலத்தில் ஜாஜ்க்கார் என்ற இடத்தில் சர்வதேச பள்ளி ஒன்று உள்ளது.

இதுகுறித்து சேவாக், 'வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இழப்பீடாக அவர்களது குடும்பத்திற்கு என்ன செய்தாலும் ஈடாகாது. இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன். உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்" என்று கூறியுள்ளார். 

இவரது செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP