ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் வரவுள்ள நிலையில் ஸ்ரீநர் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 | 

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் வரவுள்ள நிலையில் ஸ்ரீநர் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதையொட்டி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இன்று காஷ்மீர் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக கூறியது. எதிர்க்கட்சி எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அனைத்துக்கட்சி குழுவினர் இன்று மக்களை சந்திப்பதற்காகவும், அங்கு இருக்கும் சூழ்நிலைகளை தெரிந்துகொள்ளவும் காஷ்மீர் செல்கின்றனர். 

இந்நிலையில், காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம் என காஷ்மீர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் விமானநிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் வரும் எதிர்க்கட்சி தலைவர்களை விமான நிலையத்திலேயே தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பிவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP