எஸ்.சி, எஸ்.டி சட்டம்: தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் மறு சீராய்வு மனுவின் மீதான விசாரணை 10 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 | 

1989ல் இந்தியாவில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் அளிக்கும் புகாரின் பேரில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மீது  எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ஒரு புகார் அளித்ததன் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த அதிகாரி, தான் எந்த தவறும் செய்யவில்லை என ஆதாரத்துடன் நிரூபித்தார். 

இது தொடர்பான ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்தது. அதன்படி, "இனிமேல் அரசு அதிகாரிகள் மீது  எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை கூடாது, விசாரணை அடிப்படையிலும், மேல் அதிகாரியின் அனுமதியுடன் தான் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்" என  கடந்த மார்ச் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. 

எஸ்.சி, எஸ்.டி சட்டம்: தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு  வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கும்,  தலித் மக்களின் பாதுகாப்புக்கும் எதி்ராக உள்ளது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் மற்றும் பல சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் 'பாரத் பந்த்' நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதில் 10 பேர் வரை பலியாகியுள்ளனர். 

இதனையடுத்து இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு அளிக்கப்பட்டது. மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என ஏ.கே.கோயல் மற்றும் லலித் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் மறு சீராய்வு மனுவை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. 

தொடர்ந்து நீதிபதிகள், ''வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த சட்டத்தினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP