Logo

பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை சேமிப்பதால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை சேமிப்பதால் எந்த பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 | 

பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை சேமிப்பதால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை  சேமிப்பதால் எந்த பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் குறித்து, சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்தார். 

மேலும், கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் மேலாண்மை அமைப்பு 2013-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாகவும், 1 மற்றும் 2-ஆவது பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளால் கூடங்குளம் பகுதியில் எந்த பாதிப்பு இல்லை என்றும், கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

5G அலைக்கற்றை ஏலம் இந்த வருடம் நடத்தப்படும்

5G அலைக்கற்றை ஏலம் இந்த வருடம் நடத்தப்படும் என்றும், 5G அலைக்கற்றை குறித்து TRAI பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும், மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP