சர்தார் படேல் மருத்துவமனை நாட்டிற்கு அற்பணிப்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், 750 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, சர்தார் படேல் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையை, பிரதமர் நரேந்திர மாேடி நாட்டிற்கு அற்பணித்தார்.
 | 

சர்தார் படேல் மருத்துவமனை நாட்டிற்கு அற்பணிப்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், 750 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, சர்தார் படேல் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையை, பிரதமர் நரேந்திர மாேடி, நேற்று நாட்டிற்கு அற்பணித்தார்.

மிக பிரமாண்டமாக,18 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில், 1500 படுக்கைகள், 139 ஐ.சி.யு., படுக்கைகள் உள்ளன. 22 மருத்துவ துறைகள் மற்றும் அது சார்ந்த சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய, மாநில அரசுகளின் ஹெல்த்கேர் காப்பீட்டு திட்டங்கள் இங்கு செல்லுபடியாகும். ஏழைகளுக்கு, முற்றிலும் இலவசமாகவும், வசதி படைத்தோருக்கு மிக மிக குறைந்த கட்டணத்திலும் இங்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 லட்சம் சதுர அடியில், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, இங்கு பெறும் அனைத்து சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம்.

சர்தார் படேல் மருத்துவமனை நாட்டிற்கு அற்பணிப்பு

 

வசதி படைத்தோருக்கென, 200 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சூட், டீலக்ஸ், செமி ஸ்பெஷல் என, பல வகையான அறைகள் உள்ளன. நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கென தனி அறைகளும், அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கென தனி அறைகளும் கட்டப்பட்டுள்ளன. 

மிகக் குறைந்த கட்டணத்தில், முழு உடல் பரிசோதனை திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் சேவை, மொட்டை மாடியில் ஹெலிகாப்டர்களை இறக்க வசியாக ஹெலிபேடுகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம், குஜராத் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்தோரும் பலன் அடைவர் என, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP