நாட்டியத்தை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது: ஜெயப்பிரதா குறித்து சமாஜ்வாதி தலைவரின் சர்ச்சை பேச்சு!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கானின் உதவியாளர் பெரோஸ் கான், நடிகை ஜெயப்பிரதா பாஜகவில் இணைந்ததையடுத்து, ஒரு நடிகை என்பதை முன்வைத்து, அவரை இழிவாக விமர்சித்துள்ளார்.
 | 

திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகையான ஜெயப்பிரதா, கடந்த 1994ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.

பின்னர், சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி கடந்த 2010ல் ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தான் வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்ததும் அவருக்கு சீட்டும் ஒதுக்கப்பட்டு விட்டது. உத்திரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசாம் கான் போட்டியிடுகிறார். 

நாட்டியத்தை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது: ஜெயப்பிரதா குறித்து சமாஜ்வாதி தலைவரின் சர்ச்சை பேச்சு!

இந்நிலையில், அசாம் கானின் நெருங்கிய உதவியாளரான பெரோஸ் கான், "ஜெயப்பிரதா தனது நாட்டியத்தால் ரசிகர்களை கவர்கிறார். அவர், ஒரு நாட்டியக்காரி என்பதால் தான் இவ்வளவு ரசிகர்கள். நாட்டியத்தை வைத்து ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். நாட்டியத்தை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது.

ஜெயப்பிரதாவின்து நடிப்பை, அழகை பார்த்து செல்லும் ரசிகர்களை/மக்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்" என்று  மிகவும் இழிவாக விமர்சித்துள்ளார். இதேபோன்று அவர் முன்னதாகவும், ஜெயப்பிரதா ஒரு நடிகை என்பதை முன்வைத்து சர்ச்சைக்குரிய வகையில் அத்துமீறி பேசியுள்ளார். 

மேலும், ஜெயப்பிரதா இரண்டு முறை ராம்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்பதும், முதல் முறையாக அசாம் கான், அவரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP