மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் இன்று திறக்கப்படுகிறது

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று பிற்பகல் திறக்கப்படுகிறது. இன்று முதல் 5 நாள்களுக்கு பூஜை நடத்தப்படவுள்ளது. சபரிமலை, பம்பை, நிலக்கல், எழுவம்கல் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 | 

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் இன்று திறக்கப்படுகிறது

மலையாள மாதமான கும்பம் மாதத்தின் முதல் நாள், நாளை தொடங்குவதை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று பிற்பகல் திறக்கப்படுகிறது. இன்று முதல் 5 நாள்களுக்கு பூஜை நடத்தப்படவுள்ளது.

கோயில் திறக்கப்படுவதால் சபரிமலை, பம்பை, நிலக்கல், எழுவம்கல் உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் 17ம் தேதி வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பம்பையில் இருந்து நிலக்கல் வரையிலும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள்,அவர்களது வாகனங்களை பம்பையில் நிறுத்திவிட்டு நிலக்கலுக்கு நடைபயணத்தை தொடர வேண்டும் என்றும், திரும்பி வருகையில் கேரள அரசு பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP